துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு ஒதுக்குமாறு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மக்களவை சபாநாயகர் தேர்வில் என்டிஏ கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென்றால், துணை சபாநாயகர் பதவியை தர வேண்டும் என ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்ட ராகுல், பதில் எதுவும் கூறாமல் அவர் தங்களை அவமதித்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். மேலும், சபாநாயகர் நியமனத்தில் எதிர்க்கட்சிகளுடன் பாஜக ஆலோசிக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.