முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கும் எமர்ஜென்சி திரைப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் கங்கனா, “நாட்டின் கறுப்பு பக்கங்கள் குறித்த திரைப்படம்” என்று குறிப்பிட்டுள்ளார். அவசர நிலை பிரகடனத்தின்போது இந்தியா சந்தித்த இன்னல்களை இப்படம் பேசவுள்ளது