கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித்
தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், தமிழக உளவுத்துறை தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்த அவர், வனத்துறைக்கு தெரிந்துதான் சாராயம் காய்ச்சப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்த விவகாரத்தில் வனத்துறை அதிகாரிகளையும் விசாரிக்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.