இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை சென்னை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28 ஜூலை 1ஆம் தேதி வரை நடக்கும் போட்டிகளை இலவசமாக காண முடியும். மேலும், டி20 போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.150ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 29ஆம் தேதி முதல் ஆன்லைனில் விற்பனை தொடங்குகிறது.