போதைப்பொருள் புழக்கம் குறித்து தமிழ்நாடு அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் உள்ளது? என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கூறிவருவதாகவும், ஆனால், போதைப்பொருள் இல்லையென அதிகாரிகள் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லை என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றார்.