அதிமுக முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனுவை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில், தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி M.R.விஜயபாஸ்கர் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், முன்ஜாமின் அளிக்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்