ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வாகியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு, நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “INDIA கூட்டணி சார்பில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட ராகுலுக்கு வாழ்த்துகள். நாட்டு மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்ற வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.