மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுவது சரியல்ல என்று பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். அதிகாரம் இருந்தும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு தயக்கம் காட்டுவது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், பிஹாரில் நிதிஷ்குமார் அரசு நடத்தியது போல தமிழகத்திலும் மாநில அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும் எனத் தெரிவித்தார்.