ஐசிசி வெளியிட்டுள்ள பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசைப் பட்டியலில், ஆஸி., வீரர் டிராவிஸ் ஹெட் முதலிடம் பிடித்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், இந்தியாவுடனான சூப்பர்-8 சுற்றின் கடைசிப் போட்டியில் 76 ரன்கள் குவித்தார். இதன்மூலம் 844 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், ஃபில் சால்ட் ஆகியோர் 2 மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளனர்.