நீட் மற்றும் நெட் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.