நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரசுப் பள்ளி மாணவி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் மகள் கனிஷ்கா ராசிபுரம் அரசுப் பள்ளியில் படித்து வந்தார். அவருக்கு சிறுவயது முதலே இதயக் கோளாறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இன்று காலை வகுப்பறையில் மயங்கி விழுந்த அவர், அங்கேயே உயிரிழந்தார்.