சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் வாகன திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், முதற்கட்டமாக சென்னை போலீஸார் நடமாடும் நவீன கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இரவு சோதனையின் போது சாலை சந்திப்புகளில் இந்த கேமராக்களை வைப்பதால், அதில் வாகன எண் பதிவாகும். இதன் மூலம் திருடுபோன வாகனத்தை எளிதில் மீட்க முடியும்.