நான்கு கட்சிகள் மாறிய செல்வப்பெருந்தகைக்கு காங்., கட்சியின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். இறுதி வரை இந்திரா காந்தியை காமராஜர் ஏற்கவில்லை எனக்கூறிய அவர், காங்., கட்சி வசதிக்காக அரசியல் சாசனத்தை மாற்றி இருக்கலாம், வரலாற்றை மாற்ற முடியாது. 3 தேர்தலில் இரட்டை இலக்கத்தை தாண்டாத ஒரு கட்சிக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்