டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல் வழங்கி, டெல்லி ரேஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இன்று காலை சிபிஐயால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரிய நிலையில், 3 நாள் அனுமதியளித்துள்ளது நீதிமன்றம். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கெனவே அவரை EDயும் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.