‘நீ வருவாய் என’ படத்தில் அஜித்தும், விஜய்யும் இணைந்து நடிக்க இருந்ததாக நடிகர் பாவா லட்சுமணன் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார். முதலில் அஜித் கேரக்டர் ஓகே ஆன நிலையில், பார்த்திபன் கேரக்டரில் நடிக்க படக்குழு விஜய்யை அணுகியது. ஆனால், அஜித் கேரக்டரில் நடிக்க விஜய்யும் விருப்பம் தெரிவித்துள்ளார். பின்னர், இப்படத்திலிருந்து விஜய் விலகிய நிலையில், பார்த்திபன் நடிக்க ஒப்பந்தமானதாக அவர் கூறியுள்ளார்.