ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை 12% முதல் 25% வரை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தினசரி 1.5 ஜி.பி. கொண்ட 1 மாத கட்டணம் ரூ.239 லிருந்து ரூ.299 ஆக உயர்ந்துள்ளது. தினசரி 1.5 ஜி.பி. கொண்ட 3 மாத கட்டணம் ரூ.666 லிருந்து ரூ.799ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 5G பயனர்கள் தினசரி 2 ஜி.பி. மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களில் அளவிற்கு அதிகமான டேட்டா கிடைக்கும். இந்த புதிய கட்டண உயர்வு வருகின்ற ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.