துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக விநியோகிக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார். மே, ஜூன் மாதங்களுக்கு தேவையான பொருள்கள், ரேஷன் கடைகளுக்கு முழுமையாக அனுப்பப்பட்டதாக கூறிய அவர், அனைவருக்கும் து.பருப்பு, பாமாயில் கிடைக்கும் என்றார். இதனிடையே, அடுத்த 2 நாள்களில் ஜூன் மாதம் முடியவுள்ளதால், துவரம் பருப்பு, பாமாயில் வாங்காதவர்கள், உடனே சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.