திருவண்ணாமலை, நாமக்கல்,காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள்தொகை மற்றும் ஆண்டு வருமானத்தை பொருட்படுத்தாமல் 4 நகராட்சிகளை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் மேலும் சிறப்பாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.