டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட விமான நிலைய முனையத்தில் கனமழையால் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெர்மினல் ஒன்றிலிருந்து புறப்படும் ஸ்பைஸ் ஜெட் , இன்டிகோ விமானங்கள் மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.