இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பலர் சேனல்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் நல்லவர்களை கெட்டவர்கள் போலவும், கெட்டவர்களை நல்லவர்கள் போலவும் சித்தரிக்கிறார்கள் சமூக வலைதளங்களில் வரும் செய்திகளில் உண்மை எது? பொய் எது? என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும். சோஷியல் மீடியாவில் பேசும் புறணிகளை எல்லாம் கவனத்தில் கொள்ளக்கூடாது என்று மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அறிவுரை வழங்கினார்.