தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ம் தேதி கூடிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று மக்கள் நல்வாழ்வு துறையின் கொள்கை விளக்கத்தில் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், போதை பழக்கவழக்கங்களை ஏற்படுத்தக் கூடிய மருந்துகளின் விற்பனையை உன்னிப்பாக கண்காணித்து குற்றவாளிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அதே சமயம் அடிமை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் விற்பனை தொடர்பாக 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை மொத்தம் 505 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.