தமிழகத்தில் விவசாயிகளுக்கு வாழ்வாதார நிவாரணம் வழங்க கோரி இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய இபிஎஸ், டெல்டா விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் வாழ்வாதார நிவாரணம் வழங்க வேண்டும். ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும். வேளாண் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு மாதம் ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.