தமிழக பாஜக முக்கிய பொறுப்பாளர்கள் அடுத்தடுத்து நீக்கப்படுகின்றனர். சமீபத்தில் பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் திருச்சி சூர்யா, பாஜக சிந்தனையாளர் பிரிவு மாநில பார்வையாளர் கல்யாண ராமன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில செயலாளர் குமாரும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.