விஷச்சாராய விவகாரத்தில், திமுக கூட்டணியில் உள்ள விசிக உள்ளிட்ட கட்சிகளும் அநீதிக்குத் துணைபோவதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அக்கட்சியின் எம்.பி., ரவிக்குமார், 64 பேரின் சாவில், இபிஎஸ் கீழ்த்தரமான அரசியல் செய்வது சரி கிடையாது என்றார். எங்களைப் பொறுத்தவரை கூட்டணியில் இருந்தாலும், அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி, எதிர்க்கட்சி போன்று செயல்படுவதாகத் தெரிவித்தார்.