தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆ.ர்பி ராஜா பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவித்தார். அதில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று கூறினார்.
மேலும் கரூரில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மினி டைட்டில் பார்க், அரியலூர், திருச்சி, திருவாரூர் காஞ்சிபுரம், சென்னை வெளிவட்ட சாலை ஆகிய பகுதிகளில் புதிய சிப்காட் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.