வயசானாலும் உன் ஸ்டைல் உன்னைவிட்டு போகல… வயதிற்கும், அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதற்கு தோனியை அவரது ரசிகர்கள் கூறுவது தெரிந்ததே. அவர்களின் புகழாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் வெளியாகி இருக்கிறது தோனியின் புதிய தோற்றம். ஐபிஎல் 2024-க்காக விண்டேஜ் தோற்றத்தில் நீண்ட கூந்தலுடன் தோன்றிய ‘தல’யின் ஸ்டைலிஸான புதிய புகைப்படத்தை பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.