உபா வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி அனோவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்குவங்கத்தை சேர்ந்த அவர், கோயம்பேட்டில் தலைமறைவாகி கட்டுமான வேலை செய்து வந்துள்ளார். அரசுக்கு எதிராக சட்டவிரோத செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது உள்ளன. அல்கொய்தா அமைப்புக்கு ஆதரவான ‘அன்சார் அல் இஸ்லாம்’ தீவிரவாத அமைப்புடனும் தொடர்பில் இருந்த அவரை, மேற்குவங்க போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.