ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடிப்பில் 2018ல் இந்தியில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் ‘அந்தாதூன்’. பிரஷாந்த் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் இப்படம் தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் சிம்ரன், கார்த்திக் பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டே இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.