தெலங்கானாவில் கடந்த 4 மாதங்களில் மட்டும் பிஆர்எஸ் கட்சியில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் சந்திர சேகர ராவ் தலைமையிலான ஆட்சியை வீழ்த்தி, காங்., ஆட்சியை பிடித்தது. ஆட்சி மாற்றத்திற்கு பின், ஒவ்வொருவராக விலகி வரும் நிலையில், பிஆர்எஸ் எம்எல்ஏ செவெல்லா காலே யாதையா, அக்கட்சியில் விலகி ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.