தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு ஒரு மணி வரை) 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, குமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, இரவில் வீட்டிற்கு செல்வோர், பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.