நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தனது குடும்பத்துடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று, மோடி மூன்றாவது முறையாக பிரதமரானதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், சென்னையில் நடைபெறும் தனது மகள் வரலட்சுமியின் திருமணத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பில் ராதிகா, வரலட்சுமி மற்றும் அவரது வருங்கால கணவர் நிக்கோல் ஆகியோர் உடனிருந்தனர்.