தமிழகத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மாநில கல்வி கொள்கை அறிக்கை ஜூலை 1ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சமர்ப்பிக்கின்றார். 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து மாநில கல்விக் கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு பெற்றோர், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடமிருந்து ஆலோசனை பெற்று அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.