மதுவிலக்கு சட்டத்திருத்தம் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான பின்பும் மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யாமல் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் தண்டனைகள் கடுமையாக இல்லை என திருத்த மசோதா கொண்டு வருவதாக கூறுவது இந்த ஆண்டின் ஆகச்சிறந்த நகைச்சுவை என்று விமர்சித்துள்ளார்.