தமிழகத்தில் 2.23 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30, ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜூன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டைதாரர்கள் ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.