எர்ணாகுளம் மற்றும் டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில் கேரளாவின் வள்ளத்தோடு ரயில் நிலையம் அருகே சென்ற போது திடீரென ரயிலின் பெட்டிகள் கலன்று தனியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குறைவான வேகத்தில் ரயில் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் பெட்டிகள் சிறிது தூரம் சென்று தானாகவே நின்றது. பின்னர் மற்றொரு ரயில் என்ஜினுடன் பெட்டிகள் இணைக்கப்பட்டு புறப்பட்டு சென்றது.