தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 200 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக உயர்ந்தது. 2 நாட்களுக்கு முன் கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளில் இருந்து சுமார் 2,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர், இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, தமிழக எல்லையான பிலிகுண்டு வந்தடைந்தது. இதனை தொடர்ந்து நீர்வரத்து நிலவரம் குறித்து மத்திய நீர்வள அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அதே சமயம் சுற்றுலா பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.