சென்னையில் 50 லட்சம் ரூபாய் செலவில் இந்திரா காந்திக்கு சிலை வைக்கப்படும் என அண்மையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்படும் முன்பு இந்திரா சிலைக்கே கடைசியாக மாலை அணிவித்தார். அதேபோல் இந்திராவுக்கு சிலை அமைக்கும் முயற்சியால் வாழப்பாடி ராமமூர்த்தி, மூப்பனாரின் அரசியல் வாழ்க்கை இறங்குமுகம் கண்டது. இதனை நினைத்து திமுகவினர் தற்போது கலக்கமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.