பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு வெயில் வாட்டி வருகிறது. கடந்த ஆறு நாட்களில் மட்டும் 568 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக வெப்பம் வாட்டி வதைக்கும் சிந்து மாகாணத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவர் மற்றும் செவிலியர் போன்ற சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பை அரசு ரத்து செய்துள்ளது.