விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெடிமருந்து கலவை செய்யும் போது விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பட்டாசு ஆலையில் 3 அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.