கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி சம்பவம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக, பாஜக ஆகியவை தனித்தனியே புகார் அளித்துள்ளன. இந்நிலையில் அவர் தனக்கு வேண்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளை வைத்து தனியே ரகசியமாக தகவல்களை திரட்டி, அறிக்கை தயாரித்ததாகவும், அந்த அறிக்கையை கடந்த 26ம் தேதி டெல்லி சென்றபோது மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்டோரிடம் அவர் அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.