மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து, இதுவரை 65 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், இந்த திருத்தச் சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார்.