டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இன்று, இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதற்குமுன், சர்வதேச போட்டிகளில் இரு அணிகளும் 26 முறை நேருக்கு நேர் மோதியதில், இந்திய அணி 14 முறையும், தென்னாப்பிரிக்க அணி 11 முறையும் வென்றுள்ளன. மேலும், உலகக் கோப்பை தொடரில் இதுவரை 6 முறை எதிர்கொண்டதில், 4 முறை இந்திய அணியும், 2 முறை தென்னாப்பிரிக்க அணியும் வென்றுள்ளன. இந்தியா இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வெல்ல வேண்டும் என இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை, சிறப்பு பூஜைகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.