கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்புள்ளதா? என்பதை விசாரிக்க இன்டர்போல் உதவியை நாடியுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் குற்றவாளிகளின் 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 268 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் கூறினார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் வெளிநாட்டு அழைப்புகள் இருப்பதால் இன்டர்போல் மூலம் விசாரணை செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.