நீதித்துறை அரசியல் சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும் என நீதித்துறை தொடர்பான மாநாட்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். நீதித்துறையில் இருப்பவர்கள் அனைவரும் நாட்டு மக்களின் சொத்து என தெரிவித்த அவர், நீதித்துறை முற்றிலும் தூய்மையாகவும், நேர்மையாகவும், புனிதமாகவும் இருக்க வேண்டும் என்றார். இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.