நீட் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேசக்கூடாது என்று பாஜக அரசு விரும்புவதாக புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடு இந்தியா இதுவரை காணாத ஊழல் என்று விமர்சித்த அவர், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளால் மாணவர்களின் கனவு தகர்க்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருவது குறிப்பிடத்தக்கது.