2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக, விசிக உடன் கைகோர்த்து களம் காண நாம் தமிழர் கட்சி விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த கூட்டணி அமைவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு என கூறும் அரசியல் விமர்சகர்கள், முதல்முறையாக களம் காணும் விஜய், தனது பலத்தை கணக்கிட தனியாக போட்டியிடவே விரும்புவார் என்கிறார்கள். அதே போல, விசிகவும் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணியிலேயே இடம்பெறும் என்று கூறப்படுகிறது.