வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘G.O.A.T’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே, விஜய் பாடிய 2 பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்தது. பிரசாந்த், மோகன், பிரபு தேவா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் செப்.5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரிலீஸுக்கு இன்னும் 68 நாள்கள் மட்டுமே உள்ளதை குறிப்பிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது