சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உழவர் சந்தைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.45 வரை விற்பனையானது. தற்போது வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. நேற்று உழவர் சந்தைகளில் தரத்திற்கு ஏற்ப பெரிய வெங்காயம் கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.60 வரை விற்பனையானது.