திருப்பரங்குன்றம் கோவிலுக்கென்று தனி காவல் நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் , திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு தனியாக ஒரு காவல் நிலையம் தொடங்கப்படும் என்றார். அதனைப்போலவே வீரா என்ற மீட்பு வாகனங்கள், ரூ.1.94 கோடி செலவில் சிறப்பு வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். ரூ.5 கோடி செலவில் தானியங்கி பதிவு எண்ணை பதிவு செய்யும் கேமராக்கள் மற்றும் வாகனங்களை எண்ணி வகைப்படுத்தும் தானியங்கி கருவிகள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.