பீகாரின் ஆட்சி அதிகாரத்திற்கு தேஜஸ்வி யாதவ் வந்தால் இளைஞர்கள் வேலைக்கு கையேந்தும் நிலை ஏற்படும் என பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். பீகார் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நிலை மாற வேண்டும் என்ற அவர், அதற்கு சுயநலமாக செயல்படும் நபர்களை ஆட்சி அதிகாரத்திற்கு வர அனுமதிக்க கூடாது என்றார். நிதிஷூக்கு ஆதரவாக பேசிவரும் பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி யாதவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.